தங்கம் வாங்க சூப்பரான சான்ஸ்…சவரனுக்கு அதிரடி விலை குறைப்பு: தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ…!!

Author: Rajesh
16 March 2022, 3:42 pm

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடரும் நிலையில், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,787 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 38,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 38,552 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.72,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…