ரூ.40 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… தமிழ்ப்புத்தாண்டு அதுவுமா இப்படியா…? அதிர்ச்சியில் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
14 April 2022, 10:13 am

சென்னையில் இன்று தங்கம் விலை இன்றும் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், அண்டை நாடுகளிடையே எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9 உயர்ந்து 5,005 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72 அதிகரித்து 40,040 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 20 காசுகள் அதிகரித்து 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,400ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கும் தங்கம் விலை, தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று ரூ.40 ஆயிரத்தை தாண்டியிருப்பது தங்கம் வாங்க நினைக்கும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!