விளையாட்டு பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்…. ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் ; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
11 February 2024, 1:37 pm

விளையாட்டு பொம்மைகளில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 17லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நிலையில், பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனர். விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது ஒரு பயணி கொண்டு வந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மையில் சுமார் 273.5 கிராம் எடையுள்ள தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து தங்கத்தை பறிபோன செய்து யாருக்காக கடத்தி வந்தார் யாரிடத்தில் கொடுத்து அனுப்பியது என்பது குறித்து சுகத்தை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 15,39,460 என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu