இப்படி ஒரு சர்ப்ரைஸா..! துப்பிய காதலி.. அடுத்துதான் ஹைலைட்!

Author: Hariharasudhan
5 February 2025, 9:01 am

சர்ப்ரைஸாக கேக்கிற்குள் வைத்திருந்த தங்க மோதிரத்தையும் வாயில் மென்ற காதலி, காதலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது வைரலாகி வருகிறது.

பெய்ஜிங்: சீனாக்காரர்கள் எப்போதும், எதிலும் வித்தியாசமானவர்கள் என்று நம்மில் பலருக்குள்ளும் இருக்கும் எண்ணம். அந்த எண்ணத்தை மீண்டும் நிரூபித்து உள்ளனர், சீன காதல் ஜோடி. ஆம், சீனாவின் சிச்சுவான் என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு என்ற இளம்பெண்.

இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருடைய காதலர், லியுவைக் கவர்வதற்காக, அவரே கேக் ஒன்றை தயார் செய்துள்ளார். குறிப்பாக, காதலி லியுவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், தங்க மோதிரம் ஒன்றையும் அந்த கேக்கிற்குள் வைத்துள்ளார்.

பின்னர், காதலியிடம் சர்ப்ரைஸ் கொடுப்பதாகக் கூறி, அவரைத் தன் வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். இதன்படி, வீட்டுக்கு வந்த காதலியிடம், அந்த கேக்கை சர்ப்ரைஸாகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு ஏதும் வினோதமாகத் தெரியவில்லை. எனவே, அவரும் ஆசை ஆசையாக கேக்கைச் சாப்பிட்டுள்ளார்.

Gold ring in Cake in China

அப்போது அவரது வாயில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டுள்ளது. இதனால் அந்த கேக்கின் தரம் சரியில்லை என்பதை லியு உணர்ந்துள்ளார். எனவே, சுதாரித்து, அதை வெளியில் துப்பி, எடுத்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், காதலர் சர்ப்ரைஸாக வைத்திருந்த அந்த தங்க மோதிரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், மேலும் ஆனந்தம் அடைந்துள்ளார் லியு.

இதையும் படிங்க: பெண் விஏஓ மீது மாட்டுச்சாணம் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு!

இதனால், அவர்களுடைய காதல் புரோபோசல் நிகழ்வு மேலும் கலகலப்பாகி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு தனக்கு கொடுத்த இந்த மறக்க முடியாத சர்ப்ரைஸை, லியு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?