திருச்சி ரயில் சந்திப்பில் 1.89 கோடி மதிப்புள்ள தங்கம் : 15 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. ஹவாலா பணமா?!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2024, 1:17 pm
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (34) என்பவர் சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட காவல்துறை அதிகாரிகள் சதீஷ், இளையராஜா, சசிகுமார்
ஆகியோர் விசாரணை மேற்கொண்ட போது அவர் தனது பையில் வைத்திருந்த, பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் 15லட்சம ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கொண்டு வந்த 2.795கிலோ, தங்கத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு ஒரு கோடியே 89 லட்சத்து 621 ரூபாய் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
15 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றினர். போலியானது என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.