விமானத்தில் ரூ.21 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை விசாரணை

Author: kavin kumar
19 February 2022, 6:19 pm

திருச்சி : துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் இருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் வெளியேறினார். இந்த நிலையில் விமானத்தை சுத்தம் செய்வதற்காக சென்ற துப்புரவு பணியாளர் ஒருவர் விமானத்தின் இருக்கையில் பண்டல் போன்று ஒன்று உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விமானத்தில் சோதனை செய்த போது விமானத்தின் இருக்கை அடியில் பேண்டேஜ் சுற்றப்பட்ட வடிவேல் பேஸ்ட் படிவமாக தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது மேலும் இதனை அடுத்து வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து இருக்கையில் வைத்து சென்றதாக தெரியவருகிறது.

421 கிராம் தங்கம் எனவும், இந்திய ரூபாயின் மதிப்பு 21.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் இருக்கையில் தங்கத்தை வைத்து சென்ற பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!