வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2023, 6:42 pm
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!
பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட பணிகள் 2020 நவம்பரில் துவங்கியது.
இந்த பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் பணிகள் KCP Infrared Ltd., நிறுவனத்தால் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கடந்த 3 வருடங்கமாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்த நிலையில், இது குறித்து KCP Infrared Ltd.,நிறுவனத்தின் இயக்குநர் சந்திரபிரகாஷ் கூறுகையில், இப்பணி முடிவுற்றுள்ளதால் வரும் 29ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் துவங்கும் என தெரிவித்துள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இது இன்பச் செய்தியாக அமைந்துள்ளது. மேலும் சர்வீஸ் சாலை போடும் பணி இன்று முதல் துவங்க உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.