நூலிழையில் தப்பிய சரக்கு ஆட்டோ ஓட்டுநர் : அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2024, 7:38 pm
கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே, ஒருவழிப் பாதையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, சாலையை கடக்க முயன்றது.
அரசு பேருந்து வேகமாக வந்த நிலையிலும், ஆட்டோ மீது மோதாமல் இருக்க, லாவகமாக ஓட்டுநர் பிரேக் அடித்து பேருந்து நிறுத்தினார்.
எனினும் சரக்கு ஆட்டோவின் பின்புறம் அரசு பேருந்து மோதியதில், அந்த வாகனம் சேதம் அடைந்தது. எனினும் ஓட்டுநர் வேகமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒருவழிப் பாதையில் விதிமுறைகளை மீறி வந்த சரக்கு ஆட்டோ ஓட்டுனர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.