3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 4:12 pm

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ரமேஷ் என்ற வேதியல் ஆசிரியர். இவர் கடந்த மாதம் ஏழாம் தேதி அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேரை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் ஒரு அறையில் ஆசிரியரும் மற்றொரு அறையில் மாணவ, மாணவிகளையும் அவர் தங்க வைத்துள்ளார். பின்னர் அங்கு ஒரு மாணவியரிடம் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் தனது காரில் சுற்றுலா அழைத்துச் சென்ற மாணவ மாணவிகளை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ஆசிரியர், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும், கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், சுற்றுலா சென்ற விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மாணவ, மாணவிகளை ஆசிரியர் ரமேஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட ஒரு மாணவியிடம் மட்டும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வேதியியல் ஆய்வக அறையில் தனிமையில் இருந்ததாகவும், அதனை சில மாணவர்கள் பார்த்துள்ளதாகவும், இதன் பின்னர் இந்த பிரச்சனை பெற்றோருக்கு தெரிய வந்ததன் அடிப்படையில், பள்ளி நிர்வாக மூலம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுல பிரியாமற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டனர். இந்த குற்ற சம்பவங்கள் தெரிய வந்ததையடுத்து, இது குறித்து அவர் மீது கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் என் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவ, மாணவியரை பாதுகாக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் ஐந்து மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று, அதன் பின்பு அது குறித்து வெளியே சொல்லக் கூடாது என மிரட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!