அரசு ஊழியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த முதலமைச்சர் : தீபாவளி போனஸ் அறிவிப்பால் செம குஷி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2022, 1:35 pm

குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த (2021-22) மார்ச் 31ம் தேதி இப்படி பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும்.

போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசில் பணிபுரியும் பிரிவு ‘பி ‘ மற்றும் ‘சி ‘ ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனசாக ரூ 6,908 மற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184-ம் வழங்கப்பட உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2292

    0

    0