வடிவேலு பட பாணியில் ‘மருத்துவமனையை காணவில்லை’ என புகார் ; ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய மக்கள்..!!
Author: Babu Lakshmanan28 September 2022, 12:28 pm
கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். கரூரில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டதற்கு பிறகு. இரண்டாவது நிலையில் உள்ள நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விதி.
ஆனால் கலைஞரின் முதல் தொகுதியிலேயே இவ்வளவு பிரச்சினையா? என்பதைப் போல, தற்போது போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது, வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை எனப் புகார் அளித்து போலீஸ்காரர்களையே கதிகலங்கச் செய்திருப்பார்.
அதேபோல, ‘குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஊர் முழுவதும் போஸ்டரை அடித்துள்ளனர்.
அந்த போஸ்டரில், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவனையை காணவில்லை என்றும், திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடுக, எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.