அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்து பள்ளி வேன் மீது மோதிய பயங்கரம் ; பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 9:14 pm

சூலூர் அருகே சாலையில் திரும்ப முயன்ற பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 மாணவர்களுடன் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. கண்ணம்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு சூலூர் செல்வதற்காக ராவத்தூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து பள்ளி வேன் மீது மோதியது.

இதில் பள்ளி வேன் ஓட்டுநர் ராமராஜ், உதவியாளர் காந்திமதி உட்பட மாணவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். வேனில் பயணித்த கௌசிக் நிவாஸ் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் கௌஷிக் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/785232250?h=635e98362f&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 499

    0

    0