வள்ளியூருக்கு போகாது-னு ORDER வச்சு இருக்கீங்களா..? அடம்பிடித்த நடத்துநர்.. மல்லுக்கட்டிய பயணி…!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 9:24 pm

மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து ஒன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணி அளவில் வந்தது. அந்தப் பேருந்தில் வள்ளியூரை சேர்ந்த இரண்டு பயணிகள் பேருந்தில் ஏறி வள்ளியூர் செல்வதற்கு நடத்துநரிடம், பயண சீட்டு கேட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும் அந்த பேருந்து வள்ளியூர் ஊருக்குள் செல்வதற்கு உரிய ஆணை இருந்தும் நடத்துனர் வள்ளியூர் போக மாட்டேன் என கறாராக கூறியதோடு, மட்டுமல்லாமல் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், பேருந்தில் இருந்த சக பயணிகளை தூண்டிவிட்டு, நீங்கள் அனைவரும் சீக்கிரம் போக வேண்டும், வள்ளியூர் ஊருக்குள் சென்று விட்டு பேருந்து போனால் காலதாமதம் ஆகும். எனவே, அந்த பயணியை கீழே இறக்கி விட முயற்சி செய்கின்றனர். மற்ற பயணிகளை தூண்டிவிட்டு வள்ளியூர் ஏறிய இரண்டு பயணிகளிடம் நாகர்கோவில் செல்ல இருந்த பயணிகள் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: ஒடிசா TO திருப்பூர்… ரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா… இரு இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!!!

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கிளை மேலாளிடம் பேசிய பொழுது, அந்த பேருந்து வள்ளியூர் ஊருக்குள் சென்று வர ஆணை உள்ளது எனவும் அந்த கிளை மேலாளர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுவின் சொந்த தொகுதியான வள்ளியூரில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட மனு மீது, அனைத்து போக்குவரத்து கழகம் அதிகாரிகளையும் அழைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் வள்ளியூருக்கு வரவழைக்கப்பட்டு, தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் மதுரை கோட்டம், திருநெல்வேலி கோட்டம், கும்பகோணம் கோட்டம், கோவை கோட்டத்தை சேர்ந்த அனைத்து பேருந்துகளும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை மீறி தன்னிச்சையாக மதுரையில் இருந்து வள்ளியூர் போகாது என பயணிகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஏற்றி வந்துள்ளனர். இதனை மீறி பேருந்தில் ஏறிய பயணிகளை தாக்கவும் முற்பட்ட உள்ளனர். மேற்படி வள்ளியூர் ஊருக்குள் பயணிகளை ஏற்ற மறுத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சபாநாயகர் அப்பாவின் உத்தரவை மீறி செயல்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வள்ளியூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 468

    0

    0