பக்தர்களை செருப்பால் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்… இருதரப்பினரிடையே கைகலப்பு ; பழனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 5:08 pm

பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகளவில் பழனி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து பேருந்துக்கு முந்தியடிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த பக்தர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பக்தர்களை ஓட்டுநர், நடத்துனர் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால், பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்து பழனி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட பனிமனைக்குச் செல்ல தயாராகி உள்ளது. இது தெரியாமல் மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்தில் ஏறியதாகவும், பயணிகளை கீழே இறங்க சொல்லிய பேருந்து நடத்துனர் கடிந்து பேசியதால், பக்தர்களுக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சேர்ந்து பக்தர்களை காலணியால் தாக்கியுள்ளனர். தகராறு ஏற்பட்ட நிலையில் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடியதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை பனிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஓட்டுனரும், பக்தர்களும் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பலனை பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 359

    0

    0