அரசுப் பேருந்தில் பயணித்த மனநோயாளி மீது தாக்குதல் ; ஓட்டுநர், நடத்துநர் வெறிச்செயல் ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 7:54 pm

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மனநோயாளியை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த போது, நடத்துனர் பயண சீட்டு க்கு பணம் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2964

    0

    0