இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா..?.. கைக்குழந்தையுடன் பேருந்தை நிறுத்த முயன்ற பெண்.. திட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Author: Babu Lakshmanan
6 January 2024, 4:48 pm

நீலகிரி அருகே பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து கேள்வி எழுப்பிய கைக்குழந்தையுடன் இருந்த பெண்மணியை அரசுப் பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாக பேசியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூடலூர் பணிமனையிலிருந்து நாள்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பந்தலூர் அருகே உள்ள ஐய்யங்கொல்லி பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படும் நிலையில், நேற்று மாலை அய்யங்கொல்லி பகுதியில் நீண்ட நேரமாக பேருந்து நிறுத்தம் இடத்தில் கைக்குழந்தையுடன் பெண்மணி அரசு பேருந்திற்காக காத்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை நிறுத்துமாறு கைக்குழந்தையுடன் பெண்மணி கைகாட்டிய போது அரசு பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் பன்னீர் இயக்கி சென்றுள்ளார். பின்பு மற்றொரு வாகனம் மூலம் சென்ற பெண்மணி, பேருந்து ஏன் நிறுத்தவில்லை என ஓட்டுனர் இடம் கேட்டதற்கு, அரசு பேருந்து உன் அப்பன் வீட்டு பேருந்தா..? என பெண்மணியை மிரட்டும் வகையில் கூறியது, பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பேருந்து ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!