கடன் வாங்கியதாக கணவன் மனைவியிடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தூக்கிட்டு இறக்கும் முன்பு வீடியோ பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே நாமலை புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில் குடியில் உள்ள கவிக்குயில் தெருவை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் வெங்கடேசன் (52). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் பொன்மேனி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் படிக்க: கட்டிடத் தொழிலாளி கொலை செய்து உடலை தலைகீழாக புதைத்த நண்பர்கள்… காட்டி கொடுத்த செல்போன் சிக்னல் ; 2 பேர் கைது..!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணிபுரியும் வெங்கடேசன் (52), இவரது மனைவி வசந்தி (51) முண்டுவேலம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு சிவா (27) என்ற மகனும், வைபரி (25)என்ற மகளும் உள்ளனர். டிரைவராக இருந்து வரும் வெங்கடேசன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும், இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மனைவி வசந்தி கணவரை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, மனவிரக்தி ஏற்பட்ட வெங்கடேசன் கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். மன வருத்தத்தில் தனது மனைவி வேலை செய்யும் முண்டு வேலம்பட்டி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரிக்கு வீடியோ மூலம் whatsapp பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: சைட் டிஸ்-க்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. பார் ஊழியரை சரமாரியமாக வெட்டிய கும்பல்… செம்பட்டியில் பயங்கரம்..!!
அந்த வீடியோ பதிவில் அவர் பேசி இருப்பதாவது :- முருகேஸ்வரி டீச்சர் வணக்கம், இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது என் உயிர் போய்விடும், எனது பாடியை எனது அப்பா, அக்காவிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் கண்ட இடத்தில் கடன் வாங்கி என்னை கேவலப்படுத்துகிறாய் என்று என் மனைவி சொன்னார். கடன் வாங்கவில்லை, இதை புரிய வைக்க முடியவில்லை. நான் தாயில்லா பிள்ளை. ஐந்து மாதமாக பசி பட்டினியோடு வாழ்ந்து விட்டேன். அப்பாவிடம் இருந்து என்னை பிரித்தார். இப்போது என் பிள்ளைகளிடம் இருந்தும் பிரித்து விட்டார்.
ஒன்றும் தெரியாத என் மகன், என் மகள், நான் யாரை நேசித்தேனோ பலன் கிடைக்கவில்லை. என் விதி, என்னை மன்னித்து விடுங்கள். என் உடலுக்கு சடங்குகள் செய்ய வேண்டாம், நான் என் தாயைப் பார்க்கவில்லை. என் மகன், மகளுக்கு நல்வழி காட்டுங்கள். உங்களுக்கு நன்றி, எனக்கு செய்த கொடுமைக்கு ஆண்டவன் சும்மா விட மாட்டான். உடலை அப்பா, அக்காவிடம் கொடுத்து விடவும். எனது பேங்க் பாஸ்புக்கை பாருங்கள், கடன் எதற்கு வாங்கினேன் என்று தெரியும், என் மகன் மகளுக்கு நல்வழி காட்டுங்கள், என வீடியோ பதிவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசனின் உடலை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் குடும்பத்தாராரில் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது வீடியோவை பதிவு செய்து மனைவியின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.