எச்சரித்தும் கேட்காததால் நடந்த சம்பவம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
16 May 2024, 11:41 am

‘இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் தரைப்பாலம் வழியாக சென்றபோது, அங்கு ஏற்கனவே கனமழை பெய்ததின் காரணமாக, தரைப்பாலத்தில் வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த வழியாக பேருந்து வந்த போது பேருந்து போகாது என ஓட்டுனரிடம் ஒருவர் எச்சரித்தார்.

மேலும் படிக்க: மீண்டும் 54 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!!!

அதையும் மீறி பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்பொழுது அருகில் இருந்த ஒருவர் போங்க மாட்டிக்கொள்வீர்கள் என கூறிய அடுத்த நிமிடத்தில் பேருந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் கதவை உடைத்து பத்திரமாக அவர்களை மீட்டனர்.

பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!