புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து… திடீரென தீப்பற்றி எரிந்ததால் அலறியடித்து ஓடிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 12:43 pm

கடலூர் : சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, திடீரென பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்து, மளமளவென எரியத் தொடங்கியது.

இதையடுத்து, பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர், நான்கு புறமும் தீப்பற்றி முழுமையாக எரியத் தொடங்கியது. இதனையடுத்து, சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து இல்லை.

https://player.vimeo.com/video/770618592?h=3c6322efb4&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!