‘உசுரு போனா யாருய்யா பொறுப்பு’.. ஏறும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… கீழே விழுந்த மூதாட்டி ; உறவினர்கள் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 4:06 pm

மூதாட்டி அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் இயக்கிதால் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை லட்சுமணன் பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென டிரைவர் பஸ்ஸை ஓட்ட தொடங்கினார். இதனால் பேருந்தில் இருந்து மூதாட்டி பழனியம்மாள் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மூதாட்டியின் உறவினர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்துமேடு பகுதியில் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மூதாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

https://player.vimeo.com/video/881625358?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!