தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே அரசு பேருந்தில் நூதன முறையில் பெண்ணிடம் பணம் , செல்போன் திருடிய இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி சாந்தி நகரைச் சேர்ந்த செய்யது அலி என்பவரின் மனைவி செய்யது அலி பாத்திமா, அவரது தாயார் சபர்ணா(46). இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் மானங்காத்தான் கிராமத்திற்கு துக்க வீட்டிற்கு திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசு பேருந்தில் வந்துள்ளனர்.
கயத்தாரில் வந்து இறங்கியதும் சபர்ணா தனது பையில் இருந்த கை பை காணமால் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த கைப்பையில் 3500 ரூபாய் மற்றும் செல்போன் வைத்து இருந்துள்ளார். இதையடுத்து, அவர் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த பேருந்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் கைப்பையை திருடியது தெரிய வந்தது. இதையெடுத்து, கயத்தார் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் மனைவிகள் மது, பிரியா என்பது தெரிய வந்தது.
அதே பேருந்தில் வந்த பசுவந்தனையை சேர்ந்த கலையரசி என்பவரிடம் கை பையை திருடி அதில் இருந்த ரூ.1000 எடுத்துள்ளனர். பணத்தை கீழே போட்டு இது உங்களது பணமா என்று இந்த பெண்கள் கேட்டு அவர்களை கவனத்தை திருப்பி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.