ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய அரசுப் பேருந்து : அலறிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan2 December 2022, 5:56 pm
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நகரின் மையப்பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை நோக்கி செல்வதற்காக அரசு நகரப் பேருந்து நிலையம் விநாயகர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த,பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒருதேநீர் கடையில் டீ குடிக்க சென்றுவிட்டனர்.
அப்போது நிலக்கோட்டை மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பேருந்து திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி குதித்து குதித்து நகரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் அலறியடித்து சிதரி ஓடினர்.
சுதாரித்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து மேலும் பேருந்து நகர விடாமல் நிறுத்தினார். இதனால் பெரும் அரசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தானாக நகரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.