கேரளா : பாலக்காட்டில் பைக்கை முந்த முயன்ற கேரள அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது உரசி வாகன ஓட்டியின் மீது சக்கரம் ஏறி இறங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து தாமரசேரி செல்லும் சாலை வழியாக கேரள அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 8 மணி அளவில் விளையூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை கேரளா பேருந்து முந்த முயன்றுள்ளது. இதில் இடதுபுறம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கேரளா பேருந்து மோதி இரு சக்கர வாகன ஒட்டியின் மேல் பேருந்தின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கேரளா பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக முந்தி சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதில் விபத்துக்குள்ளான இரு சக்கர வாகன ஓட்டி மலப்புரம் கொளத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்துள்ளது .
இவர் தலையில் பலத்த காயத்துடன் பெரிந்தல்பண்ணா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பேருந்து உட்பட பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.