Categories: தமிழகம்

ஓட்டை உடைசல்.. இப்படி பண்ண என்னதான் பன்றது?.. அரசு பேருந்தில் தொடரும் அரசின் அலட்சியம்..!

உடைந்த கதவுடன் ஒரு வழிப்பாதையாக ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்ட மேலூர் அரசு பேருந்தின் தொடரும் அலட்சியத்தால் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்.

மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் TN58 – N1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்து பின்புற வாசலில் சாய்த்துவைக்கப்பட்ட நிலையில் இயக்கப்படுகிறது.

இதனால், பின்புற படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணாக்கர்கள் முயற்சி செய்தபோது திடீரென வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்பாராத விதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனாலும், இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பள்ளி மாணவ மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேலைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மானக்கர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவுள்ளது. எனவே, இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் இல்லையெனில், புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழி பாதை போல பயணிகள் பயன்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Poorni

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

11 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

12 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

13 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

13 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

13 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

14 hours ago

This website uses cookies.