‘பேருந்தை கொளுத்தி விடுவோம்’… கஞ்சா போதையில் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தகராறு.. அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 12:07 pm

நன்னிலம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள், மாணவர்கள் அரசு பேருந்தை வழிமறைத்து பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்க முற்பட்ட காட்சி வைரல்…

திருவாரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணியாக இருந்து வரும் கஞ்சா, குட்கா முதலான போதைப்பொருட்கள் காவல்துறை துணையுடன் பெட்டி கடைகளிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் இருந்து ஏரவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்து அதம்பார் என்ற இடத்தில் குறுகிய சாலை வழியாக சென்றபோது, பின்புறமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேருந்தினை இடைமறைத்து இருசக்கர வாகனத்திற்கு வழிவிட மாட்டாயா என பேருந்தில் ஏறி பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பேருந்தை கொளுத்திவிடுவோம் என பேருந்து நடத்தினரிடம் சவால் விட்டு ரகளையில் ஈடுபட்டனர். அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க இளைஞர் முற்படும் காட்சி மற்றும் பேருந்தை கொளுத்திவிடுவோம் என ஆவேசத்துடன் ரகளையில் ஈடுபடும் காட்சியினை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருப்பது தற்போது வைரலாக மாறியுள்ளது.

  • Chennai 28 part 3 விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!