வந்தாச்சு அரசு பொருட்காட்சி.. எத்தனை நாள் இருக்கும்? கோவை மக்களுக்கு குஷியான நியூஸ்!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2024, 10:51 am
கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
இன்று முதல் 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறும் எனவும் இந்த அரசு பொருட்காட்சியில் 27 அரசு துறைகளும்,7 அரசு சார்பு நிறுவனங்களும் என 34 அரங்குகள் அமைத்து அத்துறை மூலம் செயல்படும் திட்டங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் நுழைவு கட்டணமானது பெரியோர்களுக்கு 15 ரூபாயும்,சிறியவர்களுக்கு 10 ரூபாயும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.மேலும் பொதுமக்கள் கண்டுகளிக்கு வகையில் ராட்டினம்,ஜெயின்ட் வீல் மற்றும் உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து.. மருத்துவமனையில் பயங்கர தீ.. பச்சிளங்குழந்தைகள் பலி!
கடந்தாண்டு பொருள்காட்சியை 2,18,045 நபர்கள் பார்வையிட்டனர். அதன் மூலமாக அரசுக்கு வருவாய் 30.89 லட்சம் கிடைத்துள்ளது.