உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 12:50 pm

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை : இறுதிச்சடங்கு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வடிவேலு (43) பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி பணி முடித்துவிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி மூளை சாவு அடைந்து வடிவேலு உயிரிழந்தார். உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் முடிவு செய்து தானம் செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காந்தி காலனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு அவர்கள் குடும்பத்தார்கள் சம்மதம் தெரிவித்தனன் பேரில் அவரது உடலில் சிறுநீரகம், கல்லீரல், கண் விழி, தோல் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் இன்று வடிவேலு உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் குடையாக வழங்கப்படுபவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்

மேலும் உயிரிழந்த வடிவேலின் தந்தை கடந்த 25 ஆண்டுகளாக கண் பார்வை இழந்து இருக்கும் நிலையில் அவரை சென்னை கண் மண்டல மருத்துவமனையில் அவருக்கு ஆய்வு செய்து கண் பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தால் அவருக்கு தேவையான உதவி அரசு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 396

    0

    0