அரசு தலைமை மருத்துவமனையில் மீண்டும் லிப்ட் பழுது.. சிக்கித் தவித்த பெண்கள் ; ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 6:55 pm

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீரென பழுதாகி 3வது மாடியில் பாதியில் நின்றதால் நோயாளிகளின் உறவினர்கள் சிக்கி தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை சங்கரன்கோவில் பகுதியில் சேர்ந்த 4 பெண்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது, நோயாளி மூன்றாவது மாடியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நான்கு பெண்களும் லிப்ட் வழியாக பயணித்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி திடீரென 3வது மாடியில் நின்றதால் நான்கு பெண்களும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் அரசு மருத்துவமனைக்கு வந்த தீயணைப்புத் துறையினர் லிப்டில் சிக்கி தவித்த நான்கு பெண்களையும் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.

லிப்ட் பழுதாகி பாதியில் நின்றதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?