இரவில் மாணவிகளை அழைத்து சென்று பாலியல் தொல்லை : பகீர் கிளப்பிய அரசு விடுதி பலாத்காரம்… சிறுவன் உட்பட சிக்கிய 5 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 2:17 pm

பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் விடுதி மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தொடர்பு எண்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கொடுத்த தொலைபேசி என்னை தொடர்பு கொண்ட மாணவிகள் சிலர் கொடுத்த தகவல் மற்றும் புகாரியின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இரவு நேரங்களில் சில மாணவிகளை வாலிபர்கள் அழைத்துச்சென்று அதிகாலையில் விடுவதாக வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அனுப்பப்பட்டது.

அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் இவ்விவகராத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவிகள் சிலர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு அதிகம் கிடைத்த தகவல் படி, பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி சத்யா நகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 5பேரை பழனி அனைத்து மகளீர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாக பணிபுரிந்ததாக கூறி விடுதி காப்பாளர் அமுதா, விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி