அதிமுக அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அரசுப் பணி? முன்னாள் அமைச்சரின் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2024, 6:34 pm

அதிமுக அடையாள அட்டை இருந்தால் அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு வருகின்ற 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய கட்சியினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் விரைவில் அதிமுக உள் கட்சி பதவி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதற்காக அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிமுக ஆட்சியின் போது அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார்.

இதையும் படியுங்க: திருவொற்றியூரில் வாயுக்கசிவு.. பள்ளி மாணவிகள் மயக்கம்.. பெற்றோர் முற்றுகை!

அனைவரும் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்கள் கைகளில் புத்தகம் லேப்டாப் வைத்திருந்தனர்.

ஆனால் தற்போது கஞ்சா மதுவை வைத்துள்ளனர். மாணவர்கள் போதை கலாச்சாரத்தில் சீரழிந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!