பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்… போன் பண்ணி இடத்தை சொன்ன சர்வே உதவி ஆய்வாளர் ; லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது..!!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 12:45 pm

மதுரையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவன விற்பனை அதிகாரி. இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

3 மாதங்களாக நடவடிக்கை இல்லாததால் சர்வே உதவி ஆய்வாளர் பிரேம்குமாரை அணுகியபோது, ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பிறகு நடந்த ‘பேச்சுவார்த்தைக்கு’ பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் கிருஷ்ணன் புகார் செய்தார். போலீஸ் அறிவுரைபடி நேற்று மதியம் தாலுகா அலுவலகத்திற்கு கிருஷ்ணன் சென்றபோது, பிரேம்குமார் அங்கு இல்லை. அலைபேசியில் கிருஷ்ணன் தொடர்புகொண்டபோது அழகப்பன் நகர் ‘பீல்டி’ற்கு வந்துள்ளதால் அங்கு வருமாறு கூறினார்.

அங்கு சென்ற கிருஷ்ணனிடம் ரோட்டோர மரத்தின்கீழ் லஞ்சம் வாங்கிய பிரேம்குமாரை இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…