நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அகற்றிய அதிகாரிகள்… கண்ணீர் மல்க கதறிய விவசாயிகள் : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 2:39 pm

ராணிப்பேட்டை ; நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அதிகாரிகள் அகற்றிய நிலையில், விவசாயிகள் கண்ணீரும், கம்பளமுமாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார்.

முறையாக அந்த நிலத்திற்கு வரி கட்டி வந்த நிலையில், 5 செண்ட் இடத்தில் இருளர்களுக்கான குடியிருப்பு அமைக்க வேண்டும் என கூறி நெற்பயிர்கள் முழுவதையும் டிராக்டர் மூலம் உழுது அரசு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனால் 5 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

விவசாய நிலத்தில் திடீரென நெற்பயிர்களை அதிகாரிகள் உழுது அகற்ற முயன்ற போது விவசாயிகள் சோகமடைந்து கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் முறையிட்ட போதும், அதனை கண்டு கொள்ளாமல் டிராக்டர் மூலம் உழுது அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

விவசாயிகள் 3 மாதம் நேரம் கேட்டும் அதனை வழங்காத அதிகாரிகள் நெற்பயிரை அழிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 734

    0

    0