குறைகளை சொல்லிய பொதுமக்கள்… Candy Crush விளையாட்டில் மூழ்கிய அரசு அதிகாரி.. குறைதீர்ப்பு கூட்டத்தில் அவலம்..!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 1:41 pm

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் Candy Crush கேம்ஸ், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் மூழ்கிய அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம் போல நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் தங்கள் குறைகளை கேட்பதற்காக மனுக்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது வழக்கம். இந்த நிலையில், இது சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க வீடியோ கேம்ஸ், இன்ஸ்டாரில்ஸ் வீடியோக்கள், பேஸ்புக் ரிலீஸ் வீடியோக்களை கண்டு, அதிலே அரசு அதிகாரிகள் மூழ்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முகத்தை சுளிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டது.

அதேபோல, ஒருவர் தங்களின் குறைகளை அங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது, மறுபுறம் அதிகாரிகள் தங்கள் மொபைலில் வீடியோ கேம்ஸ் விளையாடி கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, தொடர்ந்து நடைபெறுவதால் அதிகாரிகளிடம் கவனச் சிதறல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி