விவசாயிகளை இரு குழுவாக பிரிக்க பார்க்கும் அரசு அதிகாரிகள் : குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 2:04 pm

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் இன்று நடைபெற்றது .

இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முறையான நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியும் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல் விவசாயிகள் இரு பிரிவுகளாக பிரித்து பி.ஏ.பி பாசன விவசாயிகளுக்கென தனி ஒரு கூட்டமும் நடத்துவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கைகளை தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 670

    0

    0