சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசும் கோவை மாநகரில் அடுத்தடுத்து மேம்பாலங்களை கட்டி வருகின்றன.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் உள்பட 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. காந்திபுரம் மற்றும் 100 அடி சாலையிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்திற்கு தமிழக அரசு வழிவகுத்துள்ளது.
கோவை மாவட்டத்தின் மிக நீண்ட பாலமாக உப்பிலி பாளையம் – கோல்டுவின்ஸ் வரையிலான மிக நீண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது கோவை மக்களுக்கு நல்ல பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோவை மாநகரின் சாய்பாபா கோவில் பகுதி இருந்து வருகிறது. அதனை குறைக்கும் விதமாக, பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டரை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான KCP Infra Limited நிறுவனம் எடுத்துள்ளது.
ரூ.52 கோடி செலவில் மொத்தம் 1.14 கிலோ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. 18 மாதத்திற்குள் இந்தக் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.