வெள்ளத்தில் மிதக்கும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி… மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 3:59 pm

வெள்ளத்தில் மிதக்கும் அரசுப் பள்ளிக்கூடம்… மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அவலம்!!

வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவையில் நேற்றைய முன்தினம் இரவு சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கோவை மாநகர் மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள்,பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நீரை வெளியேற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதே பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நீர் தேங்கி காணப்படுவதால் இன்று தலைமை ஆசிரியரின் அறிவுத்தலின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அப்பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!