திருப்பூர் அருகே வகுப்பறையில் அரசுப் பள்ளி மாணவி திடீர் மரணம் : சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2022, 1:37 pm
திருப்பூர் : பல்லடம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளியில் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவரது மகள் நிதர்சனா (வயது 12). பொங்கலூர் காட்டூர் அரசு பள்ளியில் 7 வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.
உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.