ஆபத்தான நிலையில் குடிநீர் டேங்க்கை சுத்தம் செய்யும் மாணவர்கள் ; வைரலாகும் ஷாக் வீடியோ… சர்ச்சைக்குள்ளான அரசு ஆரம்பப் பள்ளி..!!
Author: Babu Lakshmanan2 November 2022, 3:46 pm
மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை ஆபத்தான நிலையில் குடிநீர் டேங்க் சுத்தம் செய்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் பள்ளியில் ஆய்வு..
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளி கட்டிடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுத்தம் செய்வதும் குடிநீர் டேங்கை சுமார் பத்து அடி உயரத்திலிருந்து ஆபத்தை உணராமல் மாணவர்களை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி வட்டார கல்வி அலுவலர் மாலதியிடம் புகார் மனு அளித்தனர். இந்த பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினார். இதனால், அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர்கள் ஒரு சிலர் இந்த தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூச்சலிட்டனர்.
இதுகுறித்து நங்கவள்ளி வட்டார கல்வி அலுவர் மாலதி கூறும் போது, பொதுமக்களிடமும், தலைமை ஆசிரியை அவர்களிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.