அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலையில் திருப்பம் : பாய்ந்த நடவடிக்கை… ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2022, 11:28 am
ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரி (வயது 56). இவர் நெல்லூர் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்
இதனிடையே கடந்த வாரம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவரது தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஏற்படுத்திய மன உளைச்சலால் தான் காரணம் என நாகேஸ்வரி மகன் விக்னேஷ் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் பிரமிளா இவாஞ்சலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மீது எழுந்த புகாரை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரிமளா இவாஞ்சலினை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.