உயர்த்தப்படும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது: எப்போது? தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…..!!

Author: Sudha
12 August 2024, 12:00 pm

தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதுதொடர்பாக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் வதந்தியே.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வதந்தியை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம், ‘எக்ஸ்’ பக்கத்தில் இப்பதிவை வெளியிட்டுள்ளது.

மின் கட்டண உயர்வையும் முதலில் வதந்தி என்று தான் சொன்னார்கள்… அடுத்த இரண்டு வாரத்தில், மின் கட்டண உயர்வு என அறிவிப்பு வந்தது’ என்று குறிப்பிட்டு, மின் கட்டண உயர்வு தகவல் வதந்தி என, தகவல் சரி பார்ப்பகம், மே 10ல் வெளியிட்ட செய்தியையும் வலைதள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

  • Kaaka Muttai Ramesh போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!
  • Close menu