தேசிய கீதம் அவமதிப்பு? 3 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர்.. ஆண்டின் முதல் பேரவை புறக்கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2025, 10:16 am

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. கூட்டம்தொடங்கும் முன்பே அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து தங்களது சட்டையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இதனால் கூட்டம் தொடங்கும் முன்பே பரபரப்பை தொற்றியது. பின்னர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்என் ரவி பேரவைக்கு வருகை தந்தார்.

அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் கூட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்என் ரவி உரையை புறக்கணித்து பேரவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

RN Ravi Leave TN Secretariat in 3 Minutes

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது.

தான் அவைக்கு வந்த போது, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே படப்பட்டது. தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்ததாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!