தேம்பி தேம்பி அழுத மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் : ஆசுவாசப்படுத்திய இந்து முன்னணியினர்.. எதற்காக தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 3:50 pm

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல், திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நினைவிடத்தை மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் இராமகோபாலன் புகைப்படத்தை பார்த்ததும் தேம்பி, தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணியினர் அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று சொல்லி வருகிறது என்ற கேள்விக்கு, நான் ஆளுநராக வந்திருக்கிறேன் இதற்க்கு என்னால் பதில் சொல்ல இயலாது என்றார்.

  • Dragon vs Nilavuku Enmel Ennadi Kobam comparison 100 கோடிக்கு பின் பதுங்கும் டிராகன்…தடுமாறும் NEEK..!
  • Close menu