சேலம் செல்லும் ஆளுநர் ரவி.. ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக : முறைகேடில் சிக்கிய துணை வேந்தருக்கு ஆதரவு?

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 7:45 pm

சேலம் செல்லும் ஆளுநர் ரவி.. ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக : முறைகேடில் சிக்கிய துணை வேந்தருக்கு ஆதரவு?

விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழிலரசன் அறிவித்துள்ளார்.

துணைவேந்தர் ஜெகநாதனை காப்பாற்றுவதற்காகவே ஆளுநர் ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். ஜெகநாதன் ஒரே நாளில் ஜாமீனில் வெளியே வந்தது பற்றி ஐகோர்ட்டே கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என சி.வி.எம்.பி எழிலரசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 341

    0

    0