பாஜகவை பார்த்து ஆளுநர் ரவி பயப்படுகிறார்.. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி தமிழகத்தில் நுழைய மோடி திட்டம் : கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 6:24 pm

அதிமுக மூன்றாக உடைந்ததற்கு காரணம் RSS, எதிர்கட்சிகளை பலவின படுத்தி தமிழகத்தில் நுழைய பார்க்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் கூட்டம் வேலூர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் K.S.அழகிரி, மு.மத்திய அமைச்சர் K.V. தங்கபாலு உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் பங்கேற்றனர்.

நிகழச்சியில் பேசிய கே எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் வயது 100 வயது. உலகிலே அதிக வயது உள்ள கட்சி இரண்டு ஒன்று காங்கிரஸ், மற்றொன்று கம்யுனிஸ்ட். நம் தோழமை கட்சி இன்று ஆட்சி புரிகிறது, நம் அன்பிற்க்குரியவர் இன்று முதலமைச்சாரக உள்ளார்.

அப்படி இருந்தும் காங் கட்சி கொடி நேற்று அகற்றபட்டு உள்ளது. கவர்னர் வந்தால் கட்சி கொடியை அகற்ற சட்டம் உள்ளதா? இந்த ஊர்காவல்துறையினர் ஆளுனரை பார்த்து பயப்படுகிறா அல்லது பாஜகவை பார்த்து பயப்படுகிறறா?

தமிழ்நாட்டில் எவ்வளவோ முயற்ச்சி செய்தும் மோடி வர முடியவில்லை. இன்று ADMK மூன்றாக உடைவதற்க்கு காரணம் RSS. எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தி உள்ளே நுழைய பார்க்கின்றினர்.

மோடியை எதிர்க்கிற முதலமைச்சர்களில் ஸ்டாலின் முதற் இடத்தில் உள்ளார். 3 தீர்மானங்களை மோடியை எதிர்த்து ஸ்டாலின் கொண்டு வந்தார். அன்பு தலைவர் ராகுலை இந்தியாவின் பிரதமர் என்று கூறியவர் ஸ்டாலின் என்று பேசினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 968

    0

    0