குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய ஆளுநர் ஆர்என் ரவி : 30 நிமிடங்களில் விழா நிறைவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 8:46 am

நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகொடி ஏற்றினார்.

நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது. மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.

தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அதே சமயம், முப்படையினர்,காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்கிறார்.

இதனைத் தொடர்ந்து,வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட சில பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். டெல்லியில் நிராகரிப்பட்ட தமிழக ஊர்தி அணிவகுத்தது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் சிலைகள் இடம்பெற்றன

சுதந்திர போராட்டம், சீர்த்திருத்தங்களல் முக்கிய பங்காற்றியவர்களை போற்றும் ஊர்தி அணிவகுத்தது. பெரியார், ராஜாஜி, முத்துராமலிக் தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், சின்னமலை, திருப்பூர் குமரன், வவேசு ஐயர், காயிதே மில்லத், ஜேசி குமரப்பா ஆகியோரின் சிலைகள் இடம்பிடித்தன.

மேலும்,கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக,விழா நடக்கும் காமராஜர் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!