கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் ரவி பேச்சு..!

Author: Babu Lakshmanan
26 November 2022, 4:45 pm

திருவள்ளூர் ; இந்திய அரசாங்கம் நீண்டஆண்டுகளுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி எளாவூரில் பிரன்டியர் சைன்ஸ் பார்க்கில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுனமான தி ஸ்டடி குளோபல் நிறுவனத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதில், டாக்டர் கேஎம் செரியன் கல்வி அறக்கட்டளை மற்றும் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர்
கே எம் செரியன் கலந்து கொண்டார்.

மாணவர்களை எதிர்கால தலைவர்களாகவும், பொறுப்புள்ள உலகளாவிய குடிமக்களாக மாற்றும் வகையில் சிபிஎஸ்இ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்ட அடிப்படையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக ஆளுநர் பேசியதாவது ;- இந்திய அரசாங்கம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறந்த கல்விக் கொள்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு 18 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, கல்வி டாக்டர் செரியன் துவங்கியுள்ள இந்த மாணவர்களின் எதிர்காலத் தேவையை உறுதி செய்யும் விதமாகவும், தலைசிறந்த பயிற்சியை உலக நாடுகளுக்கு இணையாக வழங்க கூடியதாக அமைய வேண்டும்.

மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் கல்வி என்பது தரமான கல்வியாக கல்வி முறை இருக்க வேண்டும். ஏற்கனவே, மருத்துவத்துறையில் சிறந்து விளங்கிய செரியன், கல்வி துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். தானும், 8 கிலோ மீட்டர் நடந்து சென்று மின்சார வசதி, சாலை வசதி இன்றி மழைக்கால காலங்களில் செருப்பை கைகளில் தூக்கி சென்று பள்ளிக்கு போய் வந்ததையும், மண் எண்ணை விளக்கில் படித்ததையும், என நினைவு கூர்ந்தார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu