ஆளுநர் ஆர்என் ரவியை சவுக்கால் அடித்து தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர் பொன்முடி ஆவேசம்..!!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2024, 10:01 pm
ஆளுநர் ஆர்என் ரவியை சவுக்கால் அடித்து தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர் பொன்முடி ஆவேசம்..!!!
விழுப்புரம் நாடாளுமன்ற விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடையே அமைச்சர் பொன்முடி பேசுகையில், 72 ஆண்டு கால வரலாற்றில் ஆளுநரை உச்சநீதிமன்ற நீதிபதி சவுக்கால் அடித்து தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை.
என்னை அமைச்சராக்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சவுக்கால் அடித்து தீர்ப்பு வழங்கி அமைச்சராக்கிய முதலமைச்சருக்கு உங்கள் வாயிலாக உங்கள் முன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
மேலும், அங்கீகரன் பெறுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விதிகளை அறிவித்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மாநிலத்தில் போட்டியிட்ட பின்னரும், குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி இருந்தும் தர மறுத்தது அதனையும் டெல்லி உச்சநீதிமன்றம் வழக்கு தொடுத்து பானை சின்னத்தை வாங்கியுள்ளனர்.
ஆனால் முன்பே எனக்குத் தெரியும் அதனால் தான் எனது வாகனத்தில் பானை சின்னத்தை வைத்தேன் என பேசினார். இங்கே போட்டியிடும் பாமக என்று சொல்லிவிடுங்கள் பாமாக்கு இடம் முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் எத்தனையோ முறை பேசி உள்ளார் இங்கு அதிமுக செல்வர்கள் கூட்டத்தில் கூட பல உண்மைகள் சொல்லி விடுவோம் என்று தெரிவித்தார்
அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, திமுக விசிக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.