ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2025, 6:55 pm
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர்.
மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை அண்மையில் அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படியுங்க: அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!
இந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட, அவரை அருகில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிகிச்சையில் உள்ள ஆளுநருக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனே மருத்துவமனைக்கு சென்றார்.

நேரில் சென்று ஆளுநரின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,. ஆளுநர் உடல்நலன் தொடாபாக தேவையான நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.