புதுச்சேரி ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.
சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இதேபோன்று பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளிடம் பேட்டி அளித்த கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், வருகிற மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது பெண் பிறவியை கும்பிட்டு பழக்கம் உள்ளவர்கள்.
நாம் அதனால் பெண்களுக்கு அனைத்து மரியாதையும் தரக் கோரிக்கை விடுக்கிறேன் என்றும் மக்கள் மருந்தகம் என்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எளிய முறையில் வெகுவாக மிகக் குறைந்த விலையில் மக்கள் மருந்தகத்தில் அனைத்து மருந்துகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.
ஆனால் இதன் விழிப்புணர்வு மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது. 100 ரூபாய்க்கு கிடைக்கும் மாத்திரை மருந்துகள் கூட பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது.
பிரதமர் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்ததற்கு பிறகு மக்கள் தங்கள் உடல் நலனை பேணி காப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதே போன்று மூட்டு அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தவர்கள். தற்போது மிகக் குறைந்த தொகையை செலவு செய்து வருகிறார்கள். சுகாதாரத்தை பேணிக்காப்பதில் நமது பிரதமர் மோடியுடன் யாரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது எனக்கு கூறிய அவர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் 45 லட்சம் பேரின் இறப்பு இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் உயிரிழப்பு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என தெரிவித்தனர். ஆனால் அதை பிரதமர் மோடி பொய்யாக்கி உள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இன்ஃப்ளுயன்சா இந்த நோய் பரவி வருகிறது என கேள்விப்பட்டு வருகிறோம். அதிக காய்ச்சலால் குழந்தைகளும் பெண்களும் சரி ஏன் ஆண்களும் சரி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் கொரோனா முடிந்துவிட்டது என நினைத்து கையை கழுவாமலோ சமூக இடைவெளி இல்லாமலோ இருக்க வேண்டாம் உள்கட்ட அமைப்பை சரி செய்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும்.
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்போதுதான் இது போன்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டி உள்ளது அதேபோன்று பிரதமர் மோடி அறிவித்துள்ள கதி சக்தி என்பதன் மூலம் ஏழு எட்டு துறைகள் இதன் மூலம் செயல்படும்.
ரயில்வே சுகாதாரம் நெடுஞ்சாலைத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு எடுத்து ஒரு திட்டத்தை ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியா ஐந்தாவது பொருளாதார நிலையில் இருந்து மூன்றாவது பொருளாதாரம் நிலைக்கு வந்துவிட்டது என்றும் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு பிறகு அனைவருக்கும் அரிசி கொடுக்கப்பட்டுள்ளது பாஜக ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் கவர்னர்கள் செய்யும் நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் இங்குள்ள முதல்வர்கள் கடமையாற்றினால் நான்கு சுகருக்குள் இருக்க வேண்டியது தானே என்றும் ஏன் வெளியில் வருகிறார்கள் என்றும் பேசுகிறார்கள்.
முதலமைச்சர்களும் ஆளுநர்களும் உட்கார்ந்து பேசி இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றும் நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் நான் ஏன் பேச வேண்டும் அதேபோன்று நான் ஆளுநர் நான் ஏன் பேச வேண்டும் என்ற சூழ்நிலை மாற வேண்டும் முதலமைச்சரும் ஆளுநரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் அதுதான் மக்களுக்கு நல்லதாக இருக்கும்.
இணக்கம் என்பது எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இணக்கமாக பேசினால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் மாநில முதல்வரும் மாநில ஆளுநர்களும் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.