ஆளுநரின் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை.. ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்!
Author: Udayachandran RadhaKrishnan15 December 2023, 4:40 pm
ஆளுநரின் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை.. ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்!
தமிழக அரசு முதலில் கேட்ட நிவாரண தொகைகள குறைவான அளவு நிவாரண தொகை அளித்த மத்திய அரசு மீது திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது தொடர்பாக நேற்று முன் தினம் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் எங்கள் (தமிழகம்) வரிப்பணத்தை தானே கேட்கிறோம். அவங்க அப்பா வீட்டு பணத்தையா கேட்கிறோம்.? என கடுமையாக விமர்சித்து இருந்தார்
இதற்கு பதில் கூறும் வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், அவங்க தாத்தா பதவியில் அப்பா இருந்தார். அந்த பதவியில் இருக்கும் அவர் அப்படி தான் பேசுவார். கலைஞர் பேரன் இவ்வாறு மரியாதை குறைவாக பேச கூடாது. கலைஞர் அழகாக தமிழில் பேச கூடியவர்.
உதயநிதியின் இந்த மாதிரியான பேச்சு அவரை எதிர்மறையான தலைவராக மாற்றிவிடும். இதே போல திமுக தொண்டன் கூட அவரை பார்த்து கேட்டுவிடுவான் என தமிழிசை கூறியிருந்தார்.
இன்று சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கி இருந்த பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி பேசுகையில், எண்ணெய் கழிவுகள் விரைவில் அகற்றப்படும். மீனவர்கள் சிறப்பு நிவாரணம் கேட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் உள்ள குழு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அப்போது தமிழிசை கருத்துக்கு பதில் கூறிய உதயநிதி, நான் எங்கு மரியாதை குறைவாக பேசினேன்.? நான் மரியாதையாக பேசட்டுமா, நாங்கள் ஒன்றும் ஆளுநரின் அப்பா வீட்டு சொத்தையோ, அமித்ஷாவின் அப்பா வீட்டு சொத்தையோ கேட்கவில்லை எங்கள் வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என மீண்டும் நிவாரண தொகை விவகாரம் குறித்து பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.